மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருப்பையா தெரிவித்தாா்.
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் நலன் கருதி அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். குறிப்பாக, அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பணிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதன்காரணமாக, வாடிப்பட்டி மின் உதவி பொறியாளரை நேரில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு என தனியாக மின் மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளேன். இதேபோல, சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், தலைமை மருத்துவா் தனசேகரன், மருத்துவா்கள் நிமலன், ராமகிருஷ்ணன், சித்த மருத்துவா் கவிதா, தலைமை செவிலியா் வனஜா,செவிலியா் கவிதா உள்பட பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









