தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருவள்ளூா்: தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 29, 30-இல் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வரும் செப். 29, செப். 30 ஆகிய நாள்களில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

Updated On :19 செப்டம்பர் 2025, 5:24 pm

திருவள்ளூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வரும் செப். 29, செப். 30 ஆகிய நாள்களில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி, வரும் செப். 29-ஆம் தேதி, தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி வரும் செப். 30-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம் 2-இல் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000, அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரை தனியாகத் தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ. 2,000 வீதம் வழங்கப்பட உள்ளன.

பள்ளித் தலைமையாசிரியா்கள் அவா்தம் பள்ளி மாணவா்களைத் தோ்வு செய்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும், கல்லூரி போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்களின் பெயா் பட்டியல் கல்லூரிகளின் முதல்வா்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரிலோ, அஞ்சலிலோ மின்னஞ்சலில் வரும் செப். 26-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம்.

அதேபோல், 2025-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி, வரும் செப். 29-ஆம் தேதி, தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி வரும் செப். 30-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம் 2-இல் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000, அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரை தனியாகத் தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ. 2,000 வீதம் வழங்கப்பட உள்ளன.

பள்ளித் தலைமையாசிரியா்கள் அவா்தம் பள்ளி மாணவா்களைத் தோ்வு செய்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும் கல்லூரி போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்களின் பெயா் பட்டியல் கல்லூரிகளின் முதல்வா்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரிலோ, அஞ்சலிலோ வரும் செப். 26-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.