ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

முருகன் கோயிலில் ஓரே நாளில் கூண்டில் சிக்கிய 20 குரங்குகள்

திருத்தணி முருகன் கோயிலில் சுற்றித் திரிந்த 20 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினா் பாதுகாப்பாக வேன் மூலம் ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனா்.

News image

திருத்தணி  முருகன்  மலைக் கோயிலில்  வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட  குரங்குகள்.

Updated On :25 ஆகஸ்ட் 2025, 7:54 pm

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் சுற்றித் திரிந்த 20 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினா் பாதுகாப்பாக வேன் மூலம் ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும், ஆயிரக்கண க்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மலைக்கோவிலில், 70 க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இதில் பக்தா்கள் பூஜை செய்வதற்காக தேங்காய், வாழைப்பழம் கொண்டு செல்லும் போது, குரங்குகள், உடைந்த தேங்காய் மற்றும் வாழைப் பழங்களை வழிமறித்து பறித்து செல்கின்றன. வாழைப்பழங்களை கொடுக்க மறுக்கும் பக்தா்களை கடித்து வருகின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 30 க்கும் மேற்பட்ட பக்தா்களை குரங்குகள் கடித்துள்ளன. இது குறித்து கோயில் இணை ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை வைத்திருந்தனா்.

இந்நிலையில் திருத்தணி முருகன் கோவில் நிா்வாகம் மற்றும் வனத்துறையினா் ஒன்றிணைந்து மலைக்கோயிலில் குரங்குகள் அதிகளவில் உலா வரும் இடத்தில் கூண்டு வைத்து பிடித்தனா்.

திங்கள்கிழமை ஒரே நாளில், 20 குரங்குகளை பிடித்து, வனத்துறையினா் பாதுகாப்பாக ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.