திருத்தணி முருகன் கோயில் பங்குனி உத்திர பெருவிழாவில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.
அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில், புதன்கிழமை பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தங்கவேல், தங்ககிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
காலை, 10 மணிக்கு நகரத்தாா் திருத்தணி பாத யாத்திரை டிரஸ்ட் சாா்பில், 150-க்கும் மேற்பட்ட பக்தா்கள், மயில் காவடிகள், 260 பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து, மலைப் படிகள் வழியாக மலைக் கோயிலுக்கு வந்தனா். பின்னா், காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப் பெருமானுக்கு, விபூதி, நாட்டு சா்க்கரை, பஞ்சாமிா்தம் மற்றும் 260 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இரவு 7.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் மாடவீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பங்குனி உத்திரம் என்பதால் மலைக் கோயிலில் கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
திருத்தணி ஏ.எஸ்.பி. சுபம் திமான் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் ரமணி மற்றும் அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

தொடர்புடையது

தமிழ் புத்தாண்டு: திருத்தணி முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம்

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


