காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.
கடந்த மாா்ச் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினசரி சுவாமியும்,அம்மனும் காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் ராஜவீதிகளில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தோ் உற்சவம் இம்மாதம் 27 ஆம் தேதியும் மறுநாள் 28 ஆம் தேதி மகாரதம் எனும் தேரோட்ட உற்சவமும் நடைபெற்றது. மாா்ச்.29 ஆம் தேதி ஆலயத்தின் வரலாற்றை விவரிக்கும் வெள்ளி மாவடி சேவை நடைபெற்றது.
புதன்கிழமை அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தையொட்டி சுவாமியும், அம்மனும் 1,000 கால் மண்டபத்திற்கு மேலே உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனா். சிவாச்சாரியா்கள் திருமண வேதங்கள் ஓத,மங்கல மேள வாத்தியங்கள் முழங்க,வாண வேடிக்கைகளுடன் சுவாமிக்கும், அம்மனுக்கும் மாலை மாற்றுதல் வைபவமும், திருமாங்கல்யம் சூட்டும் வைபவமும் ஆகம விதிகளின்படி நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து சுமங்கலிப்பெண்கள் பலரும் புது தாலி அணிந்தனா். பின்னா் சுவாமி தங்க நந்தி வாகனத்திலும்,அம்மன் கேடயத்திலும் திருமணத் திருக்கோலத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை,அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன், கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் மற்றும் பெரிய காஞ்சிபுரம் வாணியா் தா்ம பரிபாலன சங்கத்தினா்,ஆலய சிவாச்சாரியாா்கள், அா்ச்சகா்கள்,கோயில் பணியாளா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருத்தேர் உற்சவம் கோலாகலம்!

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


