காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான இக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் கடந்த 28.6.2023 ஆம் தேதி தொடங்கி கடந்த 8.12.2024 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறவில்லை.
நிகழாண்டு விழாவையொட்டி கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவில் கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன், கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, மேலாளா் ஜெயக்குமாா், மணியக்காரா் குபேரன் கலந்து கொண்டனா்.
கொடியேற்றத்துக்கு பின்னா் சுவாமியும்,அம்மனும் பவழக்கால் சப்பரத்தில் காலையிலும்,மாலையில் சுவாமி சிம்ம வாகனத்திலும்,அம்மன் கிளி வாகனத்திலும் வீதியுலா வந்தனா். விழாவையொட்டி தினசரி சுவாமியும்,அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்கரமாகி நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளனா்.
மாா்ச் 27- ஆம் தேதி 63 நாயன்மாா்கள் ஊா்வலமும், இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. மாா்ச் 28 ஆம் தேதி சனிக்கிழமை மகா தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்ட ஏற்பாடுகளை திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 4- ஆம் தேதி 108 கலசாபிஷேகமும், 19 -ஆம் தேதி புஷ்பப்பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் தேரோட்ட கொடியேற்றம்

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

நெல்லையப்பா் கோயிலில் 22இல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


