மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருத்தேர் உற்சவம் கோலாகலம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருத்தேர் உற்சவம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது குறித்து...

News image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தேரை வடம்பிடித்து இழுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் - டிஎன்எஸ்

Updated On :28 மார்ச் 2026, 5:27 am

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி திருத்தேர் உற்சவம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் திருக்கோயில்.

இந்த கோயில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா இம்மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான 63 நாயன்மாா்கள் திருக்கூட்ட ஊா்வலம் வெள்ளிக்கிழமை காலையிலும், மாலையில் சுவாமியும், அம்மனும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரிலும் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.

72 அடி உயரம் 5 நிலைகள் 150 டன் எடை கொண்ட திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

தேரோட்டத்தை காண்பதற்காக காஞ்சிபுரம் மாநகரின் ராஜவீதிகள் முழுவதும் திரளான பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.

Summary

Tirither Utsavam is a grand event at the Ekambaranathar Temple in Kanchipuram!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.