மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த உயர் மின்னழுத்த கம்பிகளால் பரபரப்பு!

ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பிகள் குறித்து...

News image

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை வாகன ஓட்டிகள் சுதாரித்துக் கொண்டு பார்த்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு. - டிஎன்எஸ்

Updated On :28 மார்ச் 2026, 5:02 am

ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை வாகன ஓட்டிகள் சுதாரித்துக் கொண்டு வாகனங்களை முன்கூட்டியே சாலையிலே நிறுத்தியதால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் கடந்து சென்று வரும் நிலையில், அப்பம்மா சமுத்திரம் பகுதியில் திடீரென உயர் மின்னழுத்த கம்பிகள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டுநர்கள் நல்வாய்ப்பாக சுதாரித்துக் கொண்டு சாலையிலே வாகனத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் மின்வாரிய துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, அப்பம்ம சமுத்திரம், பனமரத்துப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Summary

High-voltage wires fall on the national highway near Athur, causing a stir!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.