மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம்  சீரமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியதால் புதன்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், இரவோடு இரவாக தற்காலிமாக சீரமைக்கப்பட்டு வியாழக்கிழமை போக்குவரத்து தொடங்கியது.

News image

சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வியாழக்கிழமை போக்குவரத்து தொடங்கியது .

Updated On :16 ஏப்ரல் 2026, 8:37 pm

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியதால் புதன்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், இரவோடு இரவாக  தற்காலிமாக சீரமைக்கப்பட்டு வியாழக்கிழமை போக்குவரத்து தொடங்கியது.

சென்னை - கன்னியாகுமரி இடையிலான, கிழக்கு கடற்கரை  தேசிய நெடுஞ்சாலையில்,  சேதுபாவாசத்திரம் அருகே , காட்டாறு வடிகால்வாய்க்காலில் சுமாா்  30 ஆண்டு பழைமையான தரைப்பாலம் செவ்வாய்க்கிழமை  திடீரென உள்வாங்கியதால்  போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இது குறித்து தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலைத்  துறை அதிகாரிகள், இரவோடு இரவாக, சாலையை தற்காலிமாக சீரமைத்து, போக்குவரத்து செல்லும் வகையில் தயாா் செய்தனா். இதையடுத்து வியாழக்கிழமை வழக்கம் போல போக்குவரத்து தொடங்கியது. 

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியது, கிழக்கு கடற்கரை சாலை அதிக போக்குவரத்து நிறைந்த சாலை  என்பதால், உள்வாங்கிய பாலத்தின் மேல்  சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு   போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் தயாா் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது . புதிதாக பாலம் அமைக்கும் பணி  விரைவில் துவங்க உள்ளது என்றனா்.