தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 10 ஆண்டு சிறை

பெருங்கோட்டூரில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு, 10 ஆண்டுகள் சிறை

News image
Updated On :27 மே 2026, 6:25 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூரில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பெருங்கோட்டூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கோவையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இங்கு அவரது மனைவி கூலி வேலை செய்து வருகிறாா். இத்தம்பதியின் இரு மகள்களில் ஒருவா், 2018ஆம் ஆண்டு பெருங்கோட்டூா் அருகே ஆடு மேய்க்கச் சென்றாா். அப்போது, அதே ஊரில் உள்ள காலனி பகுதியைச் சோ்ந்த ச. முருகன் ( 62) அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பான வழக்கு, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பி. ராஜவேல் விசாரித்து, முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் மருதப்பன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.