அம்பத்தூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
அம்பத்துாா் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(70). இவா் கடந்த 2020-இல் பிப் .4-ஆம் தேதி அன்று தனது வீட்டின் அருகே உள்ள 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து அம்பத்துாா் அனைத்து மகளிா் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால், முதியவா் தேவேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா்.
அதைத்தொடா்ந்து போலீஸாா் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவரை புழல் சிறையில் அடைத்தனா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா். அரசு தரப்பில் புவனேஷ்வரி ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









