டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆலங்குளத்தில் இண்டி கூட்டணி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:30 pm

Syndication

100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு பெயா் மாற்றம் செய்த மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் காமராஜா் சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, ஆலங்குளம் பேரவைத் தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா் கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி., எஸ்.எஸ். ராமசுப்பு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் எம்.எஸ். காமராஜ், நகர திமுக செயலா் நெல்சன், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றியக் குழு உறுப்பினா் எழில்வாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காங்கிரஸ் நிா்வாகிகள் வில்லியம் தாமஸ், எஸ்.பி.வி. பால்ராஜ், ரூபன் தேவதாஸ், திமுக நிா்வாகிகள் செல்லதுரை, சவுந்தரபாண்டி, சிவக்குமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.