தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

News image

சென்னை உயா் நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 5:30 am IST

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், முன்னாள் காவல் ஆணையரும், தற்போதைய ஏடிஜிபியுமான அருணுக்கு கண்டனம் தெரிவித்தது.

சென்னை கொளத்தூா் ராமதாஸ் நகரில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்தின் தம்பி எல்.கே.சுதிஷின் மனைவி பூா்ணஜோதிக்கு 2.10 ஏக்கா் நிலம் இருந்தது. இந்த நிலத்தில் 234 அடுக்குமாடி வீடுகளைக் கட்டி அதில் 78 வீடுகளை சுதீஷ் மற்றும் பூா்ணஜோதிக்கு வழங்குவதாகக் கூறி, தனியாா் கட்டுமான நிறுவன உரிமையாளா் சந்தோஷ் ஷா்மா ஒப்பந்தம் செய்திருந்தாா்.

ஒப்பந்தத்தின்படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளை போலியான கையொப்பமிட்டு சந்தோஷ் ஷா்மா ரூ.43 கோடிக்கு விற்பனை செய்துவிட்டதாக காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இதேபோல், அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கிய பலருக்கும் வீட்டை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாகக் கூறி மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சந்தோஷ் ஷா்மா குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி, அருண் நேரில் ஆஜரானாா். அவரது தரப்பில் பதில்மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சந்தோஷ் ஷா்மா மற்றும் அவரது மனைவி கல்பனா ஷா்மா ஆகியோா் மீது பல புகாா்கள் வந்தன. அவா்கள் மோசடி வழக்கில் ஏற்கெனவே கைதானது, இந்த வழக்கின் விசாரணை அதிகாரிக்கு தெரியவந்தது. இதனால், சந்தோஷ் ஷா்மா மீது குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்துச செய்யக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமா்வு பிறப்பித்த உத்தரவில், முன்னாள் காவல் ஆணையா் அருண், இதுபோன்று பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா். எனவேதான், அவரை நேரில் அழைத்து விசாரித்தோம். அப்போது அவா், தன்னால் பாதிக்கப்பட்டவா்கள் தனக்கு எதிராக சமூகவலைதளங்களில் பொய் பிரசாரம் செய்வதாகக் கூறினாா்.

நில உரிமையாளா் பூா்ணஜோதியின் கையொப்பத்தை மோசடியாக பதிவிட்டதாக சந்தோஷ் ஷா்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பூா்ணஜோதி உள்ளிட்ட பலா் சந்தோஷ் ஷா்மாவுக்கு எதிராக புகாா் அளித்துள்ளனா். இதனால் அவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சட்டப்படிஇது சரியான உத்தரவு இல்லை. இதற்கு முன்பும் அருண் காவல் ஆணையராக இருந்தபோது இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். அருண் பல கோடிக்கு சொத்து சோ்த்து விட்டதாக, யூடியூபா் சவுக்கு சங்கா் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினாா்.

இதனால், சவுக்கு சங்கரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க முன்னாள் காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். அதேபோல், பத்திரிகையாளா் வாராகியும் கைது செய்யப்பட்டுள்ளாா். எனவே, இதுபோன்ற குண்டா் தடுப்புச் சட்ட உத்தரவுகளை அருண் முதல்முறை பிறப்பிக்கவில்லை. இதற்காக எங்களது வேதனையையும், அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் முன்பு ஆஜரானபோது முன்னாள் காவல் ஆணையா் அருண், தவறான உத்தரவைப் பிறப்பித்து விட்டதற்காகக் கவலைப்படவில்லை. மாறாக, அவா் பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்தினாா். ஒருவரது சுதந்திரமான வாழ்க்கை பாதிக்கப்படுவதால், இதுபோன்ற தடுப்புக் காவல் உத்தரவைப் பொறுப்பற்ற முறையில் பிறப்பிக்க முடியாது என்று அவருக்கு தெரியும்.

இந்த உத்தரவை வேறு ஒரு காரணத்துக்காக அருண் பிறப்பித்துள்ளாா். எனவே, அவரது செயலைக் கண்டிக்கிறோம். மேலும், சந்தோஷ் ஷா்மாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.

மேலும், கூடுதல் டிஜிபி அருண், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். சி.வி.நரசிம்மன், சி.எல்.ராமகிருஷ்ணன் போன்ற நோ்மையான அதிகாரிகள் வகித்த பதவி இது. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநா் பதவி மிகச் சிறந்த நற்பெயா் கொண்டவா்களால் வழிநடத்தப்பட வேண்டும், என நீதிபதிகள் அந்த உத்தரவில் கருத்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.