திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!

உயர் நீதிமன்றத்தில் முன்னாள் காவல் ஆணையர் அருண் காத்திருப்பது பற்றி...

News image

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் - கோப்புப்படம்

Updated On :27 மே 2026, 1:05 pm IST

சென்னை: தனியார் கட்டுமான நிறுவனர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய ஆள்கொணர்வு வழக்கு விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் காத்திருக்கிறார்.

கொளத்தூர் ராமதாஸ் நகரில், தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு 2.10 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தில் 234 அடுக்குமாடி வீடுகளைக் கட்டி, அதில் 78 வீடுகளை சுதீஷ் மற்றும் பூர்ணஜோதிக்கு வழங்குவதாகக் கூறி, தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஷர்மா என்பவர் ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஒப்பந்தத்தின்படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளை போலியான கையொப்பமிட்டு சந்தோஷ் ஷர்மா ரூ. 43 கோடிக்கு விற்பனை செய்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் சந்தோஷ் ஷர்மா கைது செய்யப்பட்டார்.

இதேபோன்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கிய பலருக்கும் வீட்டை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாகக் கூறி மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தோஷ் ஷர்மா மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்களுடைய மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மகளை கவனித்துக் கொள்வதற்கு சந்தோஷ் ஷர்மாவுக்கு பிணை வழங்க வேண்டும், குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, சந்தோஷ் ஷர்மாவின் மனைவி கல்பனா ஷர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை அதிகாரி அருண் ஆஜராகி இருந்தார். அப்போது நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள அருணுக்கு சம்மன் வழங்கச் சென்ற நீதிமன்ற அதிகாரி, பிற்பகல் 3.05 மணி முதல் 5.15 மணி வரை இரண்டு மணி நேரம் காத்திருக்கச் செய்து, பின்னர் சம்மன் பெறப்பட்டுள்ளது.

எனவே, நீதிமன்ற அதிகாரியை காத்திருக்க வைத்த காவல்துறை அதிகாரி அருணின் ஊழியரை உடனடியாக நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஊழியர் ஆஜராக இருப்பதால் உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை அதிகாரி அருண் காத்திருக்கிறார்.

Summary

Case Challenging the Repeal of the Goondas Act: Former Police Commissioner Arun Awaits at the High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.