தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்! ஓ.எஸ். மணியன்

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான் என அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் கூறினார்.

News image

ஓ.எஸ். மணியன் - ஏஎன்ஐ

Updated On :26 மே 2026, 6:46 pm IST

தமிழகத்தில் ஆளும் தவெக, குதிரைபேரத்தில் ஈடுபட்டது உண்மைதான் என அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை செயலருடன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏ, தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாகக் கொடுத்த கடிதத்தை சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் கொடுத்தனர். அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணன், தவெகவுக்கு ஆதரவளித்த நிலையில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கே திரும்பினார். இதையடுத்து இன்று அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் இன்று சட்டப்பேரவைச் செயலரை நேரில் சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாகக் கடிதம் அளித்தனர்.

பின்னர் வெளியே வந்த ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களை சந்தித்த போது, குதிரை பேரம் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, கீழ்தளத்தில் ராஜிநாமா, 10 நிமிடங்களில் மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு நடக்கிறது. சால்வைகள் போர்த்துகிறார்கள். உறுப்பினர் அட்டை வழங்குகிறார்கள் என்று சொன்னால் அதற்குப் பெயர் என்ன. இது குதிரை பேரம் நடக்காமல் வேறென்ன? என்று பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.