தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காவிரி அரசியல் ஆயுதமல்ல: டி.கே. சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!

மேக்கேதாட்டு அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியதற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image

மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 7:13 pm IST

மேக்கேதாட்டு அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியதற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாகவும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருந்தார்.

அவர் பேசியதற்கு தமிழகம் முழுவதுமுள்ள அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பதிவில், “கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை விரிவாக்க அறிக்கையை விரைவுபடுத்தி மத்திய அமைச்சரவை ஒப்புதலை பெற முயற்சிப்பது, தமிழ்நாட்டின் நீர்வழங்கல் உரிமைகளுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் நேரடியான தாக்குதலாகும்.

உச்சநீதிமன்றமும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளன. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் மீது எந்த புதிய அணையும் கட்ட முடியாது. இருந்தபோதிலும், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தொடர்ந்து தூண்டுதல் நிறைந்த கருத்துகளை வெளியிட்டு, சட்ட உத்தரவுகளையும் கூட்டாட்சி கொள்கைகளையும் புறக்கணித்து வருகிறார்.

மத்திய அரசு இந்த முன்மொழிவை உடனடியாக நிராகரிக்க வேண்டும். கர்நாடகத்தின் பாஜக அழுத்தம் தமிழ்நாட்டுக்கு எதிரான பாகுபாடாக மாறக்கூடாது. தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகள் அரசியல் வசதிக்காக பலிகொடுக்கப்பட முடியாது. காவிரி ஒரு அரசியல் ஆயுதம் அல்ல. அது தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

The Cauvery is Not a Political Weapon Manickam Tagore Condemns DK Shivakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.