திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல்

பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான மே 4ஆம் தேதி என்ன நடந்தது என்பது குறித்து எம்.பி. மாணிக்கம் தாகூர் விளக்கமளித்துள்ளார்.

News image

மாணிக்கம் தாகூர். - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 3:49 pm IST

பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான மே 4ஆம் தேதி என்ன நடந்தது என்பது குறித்து எம்.பி. மாணிக்கம் தாகூர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உதயநிதி துணை முதல்வராவதற்கு தோளில் தூக்கி சுமந்த கட்சி காங்கிரஸ். உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசி இருக்க வேண்டும். தேவையில்லாமல் காங்கிரஸ் பற்றி வாய் திறந்துவிட்டார். மே 4ஆம் தேதி தேர்தல் முடிவு வெளிவரவும் அன்றைய தினம் 3 மணிக்கு தில்லி பாஜகவின் ஆணைக்கிணங்க அதிமுகவும் திமுகவும் சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதுகுறித்து எங்களுக்குத் தகவல் வந்ததும் மே-5ஆம் தேதி எங்கள் கட்சியினருடன் பேச ஆரம்பித்தோம்.

பிறகு மே 6-ஆம் தேதி தவெகவுடன் கூட்டணியில் இணைந்தோம். திமுக, அதிமுக இருவருக்கும் கனெக்டிங் கால் போட்டது பாஜக. கனெக்டிங் கால் போட்டதும் எங்களுக்கு தகவல் வந்துவிட்டது. உதயநிதியைப் பொறுத்தவரை விஜய் முதல்வராகக் கூடாது என அனைத்து முயற்சிகளையும் செய்து தோற்றிருக்கிறார். பழனிசாமி முதல்வராக திமுக வெளியிலிருந்து ஆதரவளிக்கும் என்பதுதான் டீல். காரணம் விஜய் முதல்வராகக் கூடாது என்பதுதான். இதற்கு ஆளுநரும் மறைமுகமாக உதவி இருப்பார். இருந்தாலும் எதை பற்றியும் நாங்கள் வெளியே சொல்லவில்லை.

ஆனாலும், பேபி, திருமாவளவன், சண்முகம், காதர் மொய்தீன் ஆகியவர்களால் தெரிந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து உட்கார மாட்டாம் என தெரிவித்திருக்கிறார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவிற்கு ஆதரவு என்பார்கள். இவை அனைத்திற்கும் முழு முதற்காரணம் உதயநிதி. திமுகவின் கொள்கை அனைத்தும் குப்பையில் போடப்பட்டுவிட்டது. நேற்று உதயநிதி பேசும்போது வன்மம் வெளிபட்டது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். காங்கிரஸும் திருப்பியடிக்கும் என்றார்.

Summary

MP Manickam Tagore explains what happened on May 4, the day the Assembly election results were released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.