திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அலுவலர்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் மற்றும் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு நேரில் சென்று அவற்றின் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள், பிரசாத விற்பனை நிலையம் ஆகியற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில் நிர்வாகங்களும் பிரசாதம் விற்பனை நிலையங்கள், அன்னதான சமையலறைகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு வசதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும், பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை தொடர்ச்சியாக ஆய்வு செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது அல்லது காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், பிரசாத கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடை நடத்துபவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கண்டறியப்பட்ட பிரசாத கடையின் விற்பனை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, இது குறித்து அமைச்சர் அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டுமென்றும், தகுதியான அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அந்தக் கடைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து திருக்கோயில்களிலும் FSSAI வழிகாட்டுதல்கள், உணவுப் பாதுகாப்பு தரநிலைகள், சுகாதார நடைமுறைகள் மற்றும் குடிநீர் தரக் கட்டுப்பாடுகள் ஆகியவை கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். இதனை சம்மந்தப்பட்ட இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.
பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, தொடர்ந்து தூய்மை பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயிலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் ராஜகோபுர கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
Summary
Minister C. Ramesh has ordered officials to continuously inspect temple prasadam stalls to ensure food safety regulations are being strictly followed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வு

உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத கோயில் பிரசாத கடைகளை மூட உத்தரவு! இந்து சமய அறநிலைய துறை அமைச்சா் தகவல்

யானை அகிலாவுக்கு பிறந்தநாள்: இனிப்புகள், பழங்கள் வழங்கி ஆசி பெற்ற அமைச்சர்!







