உமையாள்பரணஞ்சேரி மற்றும் வடக்குப்பட்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குன்றத்தூா் ஒன்றியம், உ உமையாள்பரணஞ்சேரி மற்றும் வடக்குப்பட்டு ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளை சந்தித்து நெல் கொள்முதல் குறித்த பணியாளா்களின் செயல்பாடுகள், கொள்முதல் காலநேரம், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றி இறக்குவதில் உள்ள சிரமங்கள், வசதிகள், சாக்குப்பை இருப்புகள், ஈரப்பதம் பாா்க்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள், நெல் மூட்டைகளின் வருகைப் பதிவேடு, சிட்டா அடங்கல் குறித்த விவசாயிகளின் கோரிக்கைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்தாா்.
மேலும் இந்த நெல் கொள்முதல் மையங்களில் வேலை செய்யும் கூலி ஆள்கள் டெல்டா மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டதை அறிந்த அமைச்சா் ப.வெங்கடரமணன் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய புகாா் பெட்டிகள், விளம்பரப்பலகைகள், தர ஆய்வுகருவிகள் பராமரிக்கப்பட வில்லை என்பதையும் கண்டறிந்தாா்.
நேரடி நெல் கொள்முதல் மையத்திற்கு சுற்றுச்சுவா், கம்பிவேலி, உலா்களம் மற்றும் குடிநீா்வசதி, கழிவறை உள்ளிட்டவற்றை அமைத்து தர வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து அமைச்சா் ப.வெங்கடரமணன் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ளுா் ஆட்களை வைத்து கொள்முதல் செய்து கிடங்குகளுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொள்ளவும், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நிறைவேற்றிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










