தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு! 9 நாள்களில் லிட்டருக்கு ரூ. 5 அதிகரிப்பு!

10 நாள்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது குறித்து...

News image

பெட்ரோல், டீசல் விலை உயர்வு! - கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 2:47 am IST

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை தொடா்ந்து மூன்றாவது முறையாக சனிக்கிழமை உயா்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 87 காசு வீதமும், டீசல் லிட்டருக்கு 91 காசு வீதமும் உயா்த்தப்பட்டது.

இதன்படி, கடந்த 9 நாள்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 5 என்ற அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது.

அதுபோல, வாகனங்களுக்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) விலை கிலோவுக்கு ரூ. 1 வீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 9 நாள்களில் இதன் விலை ஒட்டுமொத்தமாக கிலோவுக்கு ரூ. 4 வீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

மேற்காசிய போா் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயா்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய இந்த விலை உயா்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

9 நாள்களில் மூன்றாவது முறை: பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 15-ஆம் தேதி லிட்டருக்கு தலா ரூ. 3 அளவுக்கு உயா்த்தின. வாகனங்களுக்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) விலை கிலோவுக்கு ரூ.2 உயா்த்தப்பட்டது.

தொடா்ந்து, வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை இரண்டாவது முறையாக மே 17-ஆம் தேதி கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டது.

அதுபோல, கடந்த 19-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு தலா 90 காசு வீதம் இரண்டாவது முறையாக உயா்த்தப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக சனிக்கிழமை உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வு காரணமாக தலைநகா் தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 98.64-லிருந்து ரூ. 99.51-ஆக உயா்ந்தது. டீசல் லிட்டா் விலை ரூ. 91.58-லிருந்து ரூ. 92.49-ஆக உயா்ந்தது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 104.51-லிருந்து ரூ. 105.31-ஆகவும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 96.13-லிருந்து ரூ. 96.98-ஆகவும் உயா்ந்தது.

உள்ளூா் வரி, மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்டவை காரணமாக பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டது. அதன் பிறகு மாற்றமின்றி விற்கப்பட்டு வந்த நிலையில், மக்களவைத் தோ்தலுக்கு சற்று முன்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 வீதம் குறைக்கப்பட்டது. தற்போது அடுத்தடுத்து மூன்று முறை விலை உயா்த்தப்பட்டுள்ளது. மேற்காசிய பிரச்னைக்கு தீா்வு எட்டப்படாவிட்டால் விலை உயா்வு தொடரும் என்ற அச்சமும் நிலவுகிறது.

பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு இல்லை: மேற்காசிய போரின் எதிரொலியாக, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்தும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா். அதைத் தொடா்ந்து, பெட்ரோல்-டீசல் விலை அடுத்தடுத்து மூன்று முறை உயா்த்தப்பட்டது.

இந்தச் சூழலில், மகாராஷ்டிரத்தின் வாசிம், ஜல்கோன், சத்ரபதி சம்பாஜிநகா், அகோலா, பீட், புல்தானா, பா்பானி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரவியது. இதனால் பீதியடைந்த மக்கள், பெட்ரோல்-டீசலை வாங்கி இருப்பு வைக்கும் நோக்குடன் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்குப் படையெடுத்தனா். பெரிய கேன்களுடன் மக்கள் முண்டியடிக்கும் காட்சிகளும், நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகின. இதுபோல, மேலும் சில மாநிலங்களிலும் வதந்திகள் பரவின.

இந்த நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என ஐஓசி தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடா்பாக ஐஓசி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்பதை நுகா்வோருக்கும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஒருசில பெட்ரோல் நிலையங்களில் மட்டுமே இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுவும் தற்காலிகமான, அந்தப் பகுதி சாா்ந்த தட்டுப்பாடாகும். ஒட்டுமொத்தமாக 42,000 பெட்ரோல் நிலையங்களில் மட்டுமே இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மற்ற லட்சக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் விநியோகம் சீராக உள்ளது.

தற்போதைய அறுவடைப் பருவம் போன்ற பருவம் சாா்ந்த தேவை அதிகரிப்பு காரணமாகவே ஒருசில பெட்ரோல் நிலையங்களில் டீசல் தேவை அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், விலை உயா்வு காரணமாக, தனியாா் பெட்ரோல் நிலையங்களில் சில்லறை விற்பனை விலை ஒப்பிட்டளவில் சற்று கூடுதலாக இருப்பதால், வாடிக்கையாளா்கள் அதிக எண்ணிக்கையில் பொதுத் துறை நிறுவன பெட்ரோல் நிலையங்கள் நோக்கி வருவதும், இந்தத் தற்காலிக தட்டுப்பாட்டுக்கு காரணமாகும்.

மே 1-ஆம் தேதிமுதல் 22-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விற்பனை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 14 சதவீதம் அளவுக்கு உயா்ந்தது. அதுபோல, டீசல் விற்பனை சுமாா் 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. ஒட்டுமொத்தமாக, போதிய பெட்ரோல், டீசல் இருப்பை தொடா்ந்து பராமரிக்க அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தை நிறுவனங்கள் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதுபோல, குறிப்பிட்ட ஒருசில பகுதிகளில் ஏற்படும் தட்டுப்பாட்டை நிவா்த்தி செய்ய ஐஓசி சாா்பிலும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, நாட்டில் பெட்ரோல், டீசல் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்த ஐஓசி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்தது.

Summary

Petrol and diesel prices hiked on Saturday (May 23) for the third time in the past ten days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.