தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி - காங்கிரஸ்

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது, நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சி என்று காங்கிரஸ் தெரிவித்தது குறித்து...

News image

ராஜிவ் சுக்லா - படம் - ஏஎன்ஐ

Updated On :23 மே 2026, 2:24 pm IST

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது, நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சி என்று காங்கிரஸ் எம்.பி. ராஜிவ் சுக்லா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக உலகளவில் எரிவாயு விநியோகம் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. இதனால், கடந்த பத்து நாள்களில் மட்டும் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து பேசிய, ராஜிவ் சுக்லா, “இது நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியாகும். பெட்ரோல், டீசல் விலை உயரும்போது, ​​பணவீக்கம் எல்லாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பொதுமக்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

நமது தவறான வெளியுறவுக் கொள்கையின் காரணமாக, இன்று பெட்ரோல், டீசல் விலை இவ்வளவு உயர்ந்து வருகிறது. இதுவரை ஒரு லிட்டருக்கு சுமார் ரூ. 5 அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு ரூபாய் உயரும் என்பது தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, 51,000 இளைஞர்களுக்கு இன்று பணிநியமன ஆணையை வழங்கியது குறித்து பேசிய ராஜிவ் சுக்லா, ”நாட்டில் மொத்தம் 22 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக நான் நம்புகிறேன். 51,000 இளைஞர்களுக்கு மட்டும் நியமனை ஆணைகளை வழங்கினால், என்ன செய்வது? எனவே, இதெல்லாம் போதாது” எனக் கூறினார்.

Summary

Congress MP Rajiv Shukla stated on Saturday that the hike in petrol and diesel prices has come as a massive shock to the people of the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.