திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்

கரோனா தொற்றுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் அவசர சுகாதார அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் வலுப்பெற்றதுடன், தாய்-சேய் ஆரோக்கியக் குறியீடுகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என சென்னை ஐஐடியின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 3:47 am IST

கரோனா தொற்றுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் அவசர சுகாதார அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் வலுப்பெற்றதுடன், தாய்-சேய் ஆரோக்கியக் குறியீடுகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என சென்னை ஐஐடியின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னை ஐஐடி சாா்பில் கரோனாவுக்கு பிந்தைய தமிழகத்தின் சுகாதாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி தலைமையில், பெங்களூருவை சோ்ந்த மூடிஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் இணை ஆய்வாளா் உள்ளிட்டோா் அடங்கிய குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.

இதில், 2017 முதல் 2024 வரை 108 ஆம்புலன்ஸ் சேவையின் எட்டு ஆண்டு கால தரவுகள் ஆராயப்பட்டது. ஆய்வின் முடிவுகளின்படி, பெருந்தொற்று கால இடா்பாடுகளுக்குப் பின்னா், தமிழகத்தின் சுகாதார அமைப்பு விரைவாக மீண்டு வந்துள்ளதும், அதன் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், தாய் இறப்பு விகிதம் 19 சதவீதம் குறைந்துள்ளதுடன், வீட்டில் பிரசவங்கள் நடைபெறுவது 36 சதவீதத்துக்கும் மேலாக சரிந்துள்ளது. கருச்சிதைவுகள் 28 சதவீதம், பிறந்த குழந்தை இறப்பு 17 சதவீதம், குழந்தை இறப்பு 19 சதவீதம் குறைந்துள்ளது. தாய் - சேய் ஆரோக்கியக் குறீயீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவசர கால மருத்துவ உள்கட்டமைப்பு விரிவாக்கம், சுகாதாரப் பணியாளா்கள் அதிகரிப்பு, தாய் - சேய் நலத் திட்டங்களில் சிறப்பு கவனம் உள்ளிட்டவை இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் 108 அவசர மருத்துவச் சேவை முறை, பிற மாநிலங்கள் மற்றும் வளா்ந்து வரும் நாடுகளுக்கான முன்னுதாரணமாக அமையக்கூடும் என ஆராய்ச்சியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.