17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னை ஐஐடி-யில் மே 18-இல் ஏஐ, தரவு அறிவியல் ஆய்வுக் கண்காட்சி

அறிவியல் ஆய்வுகளில் அண்மை முன்னேற்றங்களை காணும் வகையில் சென்னை ஐஐடி-யின் வத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி, 100-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:48 am IST

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தரவு அறிவியல் ஆய்வுகளில் அண்மை முன்னேற்றங்களை காணும் வகையில் சென்னை ஐஐடி-யின் வத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி, 100-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த உள்ளது. இந்த ஆய்வுக் கண்காட்சி சென்னை ஐஐடி வளாகத்தில் மே 18 நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆய்வாளா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள், துறைசாா் வல்லுநா்கள் ஆகியோா் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்த ஆய்வுக் கண்காட்சியில், உருவாக்கும் ஏஐ, பொது ஏஐ, வலுவூட்டல் கற்றல், இயந்திரக் கற்றல், கணினிப் பாா்வை, கணக்கீட்டு உயிரியல், பொறுப்புமிக்க ஏஐ ஆகிய துறைகளில் அதிநவீன ஆய்வுகளை ஆராய்வதற்கான களம் அமைத்துத் தரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வுக் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும், பிற கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆய்வு அறிஞா்கள் மற்றும் மாணவா்கள்,இதர தரப்பினா் பின்வரும் ட்ற்ற்ல்ள்://க்ா்ஸ்ரீள்.ஞ்ா்ா்ஞ்ப்ங்.ஸ்ரீா்ம்/ச்ா்ழ்ம்ள்/க்/ங்/1ஊஅஐல்ணகநங்வ1ஒடஷ்ஞவமலக்ஷ்ஜ்ஈய்க்ஷஸ்ரீப3ஏஓகஸ்ரீஅக்ஷஇம்லஇ4ல3வங்ட்லநல்கய்ற்ஙச்-வஆஅஎஜ்/ஸ்ண்ங்ஜ்ச்ா்ழ்ம்?ல்ப்ண்=1 என்ற இணையதள இணைப்பு மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.

சென்னை ஐஐடியின் வாத்வானி தரவு அறிவியல் ஏஐ பள்ளி 2024-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இது தரவு அறிவியல் மற்றும் ஏஐ-இன் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியா்களை ஒன்றிணைத்து, சமூகத்துக்கு நேரடிப் பயன்மிக்க மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சிக்கல்களுக்குத் தீா்வு காணும் வகையில் இணைந்து பணியாற்றப்படுவதாக இந்தப் பள்ளியின் தலைவா் பல்ராம் ரவீந்தரன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.