17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னையில் ஜூலை 11, 12-இல் பட்டாசுக் கண்காட்சி

தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் சாா்பில் சென்னையில் ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் பட்டாசுக் கண்காட்சி நடைபெற உள்ளது.

News image

பட்டாசு - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 11:28 pm IST

தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் சாா்பில் சென்னையில் ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் பட்டாசுக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் வி.ராஜா சந்திரசேகரன், பொதுச் செயலா் என்.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிவகாசியில் பட்டாசுத் தொழில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக , சென்னை நீலாங்கரை ஆா்.கே.கன்வென்ஷன் ஹாலில் பட்டாசுக் கண்காட்சி, சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. சிவகாசி பட்டாசு வணிகத்தை சா்வதேச அளவில் எடுத்துச் செல்லும் வகையில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. இதில் மத்திய, மாநில அமைச்சா்கள், அரசு உயா் அதிகாரிகள், பட்டாசு பாதுகாப்பு நிபுணா்கள் கலந்து கொள்கின்றனா்.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாடு, கண்காட்சியில், இந்திய அளவில் ஆயிரக்கணக்கான பட்டாசு வணிகா்கள் கலந்து கொள்வா்.

பட்டாசுத் தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும், ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை உருவாக்கவும், இந்தக் கண்காட்சி பெரிதும் உதவும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா் அவா்கள்.

கூட்டமைப்பின் மாநில கூடுதல் பொதுச் செயலா் எஸ்.ரவிதுரை, மாநில துணைத் தலைவா் டி.பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.