தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சரும் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று (மே 20) தெரிவித்தார்.
அமைச்சரவையில் காங்கிரஸுக்கு எந்தத் துறை ஒதுக்கினாலும் மகிழ்ச்சிதான். அதை முதல்வர் விஜய் முடிவு செய்வார். அதனை காங்கிரஸ் ஏற்கும்.
இது சிறப்பான ஆட்சியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையின் மூலம் மக்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.
Summary
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவது அது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல; ஒரு உணர்வு என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
மீண்டும் கதர் ஆடை அணிந்த காங்கிரஸ் அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் அமர்கிறார்கள். அது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல. ஒரு உணர்வு. ஒரு வரலாற்று தருணம்.
காமராஜர் காலத்தின் அரசியல் மரபு, எளிமை, தேசிய சிந்தனை, தியாக அரசியல் மற்றும் கூட்டணி மரியாதை மீண்டும் தமிழ்நாட்டு ஆட்சியில் இடம் பெறும் தருணம் இது.
இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (ஐஎம்இசி) முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் நடத்திய ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.
ஈடர்ன் கார்டன் கிரிக்கெட் திடலில் நடைபெறும் ஐபிஎல் போட்டி மழையில் நிறுத்தப்பட்டுள்ளது. டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஓவர்களில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேமரூன் கிரீன், சௌரப் துபே தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்கள்.
அரசு முறைப் பயணமாக ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மொலோனிக்கு மெலோடி சாக்லேட்டுகளை பரிசாக வழங்கிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதன் விளைவு இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. மொலோடி சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லேவின் பங்குகள் 5% வரை அதிகரித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் இருவர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ராஜேஷ்குமார், பி. விஸ்வநாதன் ஆகியோரை தவெக அமைச்சரவையில் நியமிக்க காங்கிரஸ் தலைமை இன்று (மே 20) ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் அமைச்சர்களாக நாளை (மே 21) பொறுப்பேற்கவுள்ளனர்.
முன்னாள் பொறுப்பு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 11 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையம் மற்றும் திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாகக் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
சென்னையில் 5 காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.
பிரான்ஸில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்ளவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று தவெக உறுதியளித்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் 8,818
மாணவிகள் 9,050
மொத்தம்: 17,868.
தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:
மாணவர்கள்- 8,502
மாணவிகள்- 8,827
மொத்தம்- 17,429
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.42 %
மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.64.
மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 97.54 %
தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இணைய வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார்.
ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார்.
தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டைவிட 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு 0.51% அதிகம்.
10 ஆம் வகுப்பு தேர்வெழுதிய 94.31% மாணவர்கள் தேர்ச்சி. தேர்வில் 96.47% மாணவிகள், 92.15% மாணவர்கள் தேர்ச்சி.

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் இன்று பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். உடன் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தர மோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ. நரேஷ், அரசுத் தேர்வுகள் இயக்குநர் க. சசிகலா, தனியார் பள்ளிகள் இயக்குநர் எஸ்.சுகன்யா, அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் கே.பி.மகேஸ்வரி, இணை இயக்குநர் (மேனிலைக் கல்வி) த. இராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகள் 91.86% தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகள் 91.86%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34%
தனியார் சுயநிதி பள்ளிகள் 98.14%
இருபாலர் பள்ளிகள் 94.42%
பெண்கள் பள்ளிகள் 96.42%
ஆண்கள் பள்ளிகள் 88.50%
தமிழ் 98.43%
ஆங்கிலம் 99.44%
கணிதம் 97.36%
அறிவியல் 98%
சமூக அறிவியல் 97.93%
புதுக்கோட்டை முதலிடமும், சிவகங்கை 2 ஆம் இடம், தஞ்சாவூர் 3 ஆம் இடம், திருச்சி 4ஆம் இடம், கன்னியாகுமரி 5 ஆம் இடம் பிடித்துள்ளது.
4.19 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் 4.01 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
97.57 சதவிகிதத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
1,931 அரசுப்பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 5,170 தனியார் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளன.
Summary
தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று குறுஞ்செய்தி அனுப்பினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்-அப்பிற்கே வந்துவிடும்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக 8,82,806 பள்ளி மாணவர்களும், 25,801 தனித்தேர்வர்களும், 395 சிறைவாசிகளும் எழுதியிருந்தனர்.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


















