தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு!

மோடி - மெலோனி சந்திப்பு பற்றி...

News image

மோடி - மெலோனி - Photo: X / Modi

Updated On :20 மே 2026, 11:04 am IST

ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார்.

ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனது ஐந்தாவது மற்றும் இறுதி நாள் சுற்றுப்பயணமாக இன்று இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ளார்.

ரோம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு துணைப் பிரதமர் அண்டோனியா தஜானி நேரில் வரவேற்றார். தொடர்ந்து, இந்திய புலம்பெயர்ந்தோருடன் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசினார்.

Story image

இந்த சந்திப்பின் போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த மோடி, “ரோமில் தரையிறங்கியதும், பிரதமர் மெலோனியை இரவு உணவின்போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க கொலோசியம் தளத்துக்கு சென்றேன்.

பல்வேறு விவகாரங்களில் இந்தியா-இத்தாலி நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்த உரையாடலின் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மோடியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள மெலோனி, ரோமிற்கு உங்களை வரவேற்கிறேன், நண்பரே எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Modi Meets Italian Prime Minister Meloni!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.