மேற்கு வங்கத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மொத்த தேர்ச்சி விகிதம் 91.23 ஆகப் பதிவாகியுள்ளது.
புதிய கல்வி முறையின் கீழ் நான்காம் பருவத் தேர்வர்கள், மூன்றாம் பருவத் துணைத் தேர்வர்கள் (முந்தைய தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்) மற்றும் பழைய ஆண்டுத் தேர்வு முறையின் கீழ் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகியோரின் முடிவுகள் இதில் அடங்கும்.
இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.47 சதவிகிதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.71 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது.
அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மொத்தம் 7,10,811 மாணவர்கள் பங்கேற்றனர்.
தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி, தனது சமூக ஊடக பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதில், “உங்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை வெற்றியாக உருவெடுத்துள்ளன.
இந்த வெற்றி, இனிவரும் பாதையில் இன்னும் பெரிய கனவுகளை அடைய உங்களைத் தூண்டும். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக அமையவும் நீங்கள் எல்லா துறைகளிலும் வெற்றி பெறவும் உங்கள் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்க்கவும் நான் விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்கு வங்க உயர்கல்வி கவுன்சில், ஏற்கெனவே பழைய ஆண்டுத்தேர்வு முறைக்கு பதிலாக இந்த புதிய நான்கு பருவக் கல்வி முறையை அமல்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
With the Class 12 examination results released in West Bengal, the overall pass percentage has been recorded at 91.23%.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










