தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2 ஆம் தேதி முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தோ்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தேர்வு எழுதியவர்களில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் 98.87 சதவிகிதத்துடன் ஈரோடு முதலிடமும், சிவகங்கை 98.05 சதவிகிதத்துடன் இரண்டாமிடத்திலும், கன்னியாகுமரி 97.63 சதவிகிதத்துடன் மூன்றாமிடமும், திருநெல்வேலி 97.54 சதவிகிதத்துடன் நான்காம் இடத்திலும், திருச்சி 97.50 சதவிகிதத்துடன் ஐந்தாம் இடமும் பெற்றுள்ளன.
தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், வாட்ஸ்அப் எண்ணிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் செயலியில் 78452 52525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடா்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் hi எனப் பதிவிட்டு பின்னா் வரும் செய்தியில் துறையின் பெயா், தோ்வா்களின் வகுப்பை தெரிவு செய்தால், தொடா்ந்து வரும் பதில் செய்தியில் தோ்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து அனுப்பினால் தோ்வா்களின் தோ்வு முடிவுகள் அதே வாட்ஸ் ஆப் செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வாட்ஸ் ஆப் செயலியில் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Summary
Top 5 Districts in Plus 2 Results: Erode Takes First Place.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 தேர்வு முடிவு: கடலூர் மாவட்டம் 95.57% தேர்ச்சி!

மே 13 முதல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!
பிளஸ் 2 முடிவுகள்: 98.05% பெற்று சிவகங்கை சாதனை!

கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது?
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


