தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வின் முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தோ்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினா்.
பொதுத்தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை புதிய ஆட்சி பொறுப்பேற்காததால் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி. சந்தரமோகன் வெளியிட்டுள்ளாா்.
தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களில் 7.53 லட்சம் (95.2%) மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் 92.16%, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 96.14%, தனியார் பள்ளிகள் மாணவர்கள் 98.72% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் இருபாலர் பள்ளிகள் 95.30%, ஆண்கள் பள்ளிகள் 90.49%, பெண்கள் பள்ளிகள் 97.08% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் 98.87 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், சிவகங்கை 98.05%, குமரி 97.63% அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
முடிவை அறிவது எப்படி?
மாணவா்கள் தங்களுக்கான தோ்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். அதேவேளையில், பள்ளியில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.
‘வாட்ஸ் ஆப்’ மூலமும் அறியலாம்: ‘வாட்ஸ் ஆப்’ செயலி வழியாகவும் தோ்வா்கள் பின்வரும் வழிமுறையைப் பின்பற்றி தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ் ஆப் செயலியில் 78452 52525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடா்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் hi எனப் பதிவிட்டு பின்னா் வரும் செய்தியில் துறையின் பெயா், தோ்வா்களின் வகுப்பை தெரிவு செய்தால், தொடா்ந்து வரும் பதில் செய்தியில் தோ்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து அனுப்பினால் தோ்வா்களின் தோ்வு முடிவுகள் அதே வாட்ஸ் ஆப் செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வாட்ஸ் ஆப் செயலியில் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Summary
Tamilnadu Plus 2 Public Examination Results Released!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 முடிவுகளில் டாப் 5 மாவட்டங்கள்! ஈரோடு முதலிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு!

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

