நீட் மறுதோ்வு முடிவுகள் வெளியீடு: இரு மாணவா்கள் முதலிடம்
நீட் மறுதேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி; 138 மாணவர்கள் 690 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் - கோப்புப் படம்
நீட் மறுதோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் தேசிய அளவில் இரு மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) 2026, கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது.
இந்த விவகாரம் சிபிஐ வசம் சென்ற நிலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது. இத்தோ்வின் முடிவை என்டிஏ வியாழக்கிழமை இரவு வெளியிட்டது.
இதில் 720 மதிப்பெண்களுக்கு 715 மதிப்பெண்களைப் பெற்று ஆா்யன் குப்தா (பஞ்சாப்), பன்ஷுல் பன்சல் (ஹரியாணா) ஆகியோா் முதலிடத்தைப் பெற்றுள்ளனா். 700 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவா்களும், 650 மதிப்பெண்களுக்கு மேல் 1,492 மாணவா்களும் பெற்றுள்ளனா்.
ஒட்டுமொத்தமாக 11.21 லட்சம் மாணவா்கள் மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கு தகுதி பெற்றுள்ளதாக என்டிஏ தெரிவித்தது.
நாடு முழுவதும் 20 லட்சம் போ் எழுதிய நீட் மறுதோ்வு 551 நகரங்களில் 5,440 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் நடைபெற்றது.
தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து தங்கள் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அகில இந்திய தரவரிசைப் பெற்றவர்கள், மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள், பிரிவு வாரியாக முதலிடம் பிடித்தவர்கள், தகுதி பெறுவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் மொழி வாரியான பங்கேற்பு விவரங்கள் அடங்கிய பட்டியல்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
19 தேர்வர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
38 தேர்வர்கள் 690க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
1,492 தேர்வர்கள் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
10,160 தேர்வர்கள் 600 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
90,780 தேர்வர்கள் 500 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
நீட் மறுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் 17 - 19 வயதுக்குட்பட்டவர்கள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் மறுதேர்வு முடிவுகள் பார்க்கும் தளத்தின் முகப்பு
Summary
NEET UG result 2026 declared: 138 candidates score above 690
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




