தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக - அதிமுக கூட்டணி; ரஜினியின் பெயர் தேவையற்றது: டி.கே.எஸ். இளங்கோவன்

திமுக - அதிமுக கூட்டணி குறித்த பேச்சில் ரஜினியின் பெயர் தேவையற்றது என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தது குறித்து...

News image

திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் - ANI

Updated On :17 மே 2026, 1:03 pm IST

திமுக - அதிமுக கூட்டணி குறித்த பேச்சில் ரஜினியின் பெயர் தேவையற்றது என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ”என்னைப் பற்றிய சில கருத்துகள் சமூக வலைதளப் பக்கத்தில் பரவி வருகிறது. அதற்கு நான் விளக்கம் தர வேண்டும்.

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் தோல்வியுற்றது எனக்கு சங்கடமாக இருந்தது. அதற்காக, நண்பர் என்ற முறையில் நான் அவரை சந்தித்தேன். அரசியலுக்கு அப்பாற்பட்டது எங்கள் நட்பு” எனத் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், “ரஜினி உண்மையான நிலவரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எங்கள் கட்சித் தலைவரை தனிப்பட்ட நட்பின் காரணமாகச் சந்தித்தார். முதல்வர் விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியானது.

அவர் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். சிலர் இதைத் திரித்துக் கூறுகிறார்கள். ஆனால், அவரது பதிலானது நிலைமையைச் சரிசெய்யும். திமுக - அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சில் அவரது பெயர் தேவையற்ற முறையில் தொடர்புபடுத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.

Summary

DMK spokesperson T.K.S. Elangovan has stated that Rajini's name is unnecessary in the context of a DMK-AIADMK alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.