முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
”என்னைப் பற்றிய சில கருத்துகள் சமூக வலைதளப் பக்கத்தில் பரவி வருகிறது. அதற்கு நான் விளக்கம் தர வேண்டும்.
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் தோல்வியுற்றது எனக்கு சங்கடமாக இருந்தது. அதற்காக, நண்பன் என்ற முறையில் நான் அவரை சந்தித்தேன். அரசியலுக்கு அப்பாற்பட்டது எங்கள் நட்பு.
விஜய் முதல்வராகக் கூடாது என்பதை தடுப்பதற்காக நான் சந்தித்தேன் என்றும் இரு கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவே நான் அவரைப் பார்த்தேன் என்றும் விமர்சனங்கள் வருகிறது.
அந்தச்சூழலில் நான் அப்படி பேச முடியுமா? அப்படி பேசும் தரம் கேட்ட ஆள் ரஜினிகாந்த் கிடையாது. விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விஜய் வெற்றி பெற்றவுடன் என்னுடைய எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தேன்.
அரசியலில் நான் இல்லை, விலகிவிட்டேன் என்று கூறிவிட்டேன். அரசியலில் நான் இல்லாதபோது எனக்கு ஏன் பொறாமை? ஒருவேளை கமல்ஹாசன் முதல்வராகி இருந்தால் எனக்கு பொறாமை வந்திருக்குமோ என்று தெரியாது, அப்போதும் வந்திருக்காது” என்றார்.
Summary
Actor Rajinikanth has offered an explanation regarding his meeting with former Chief Minister M.K. Stalin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








