ரஜினிகாந்த்தின் வாா்த்தை எப்போதும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரைக் குறித்து அரசியல் கத்துக்குட்டி நபா் பேசுவது கண்டனத்துக்குரியது என வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
பாலியல் வன்கொடுமை, சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து, திருப்பூா் குமரன் சிலை அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாா்பில் பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சா்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சி.மகேந்திரன், கே.என்.விஜயகுமாா், பாஜக மாவட்டத் தலைவா்கள் சீனிவாசன், மோகனப்பிரியா, அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான விசாலாட்சி உள்பட கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 69 சதவீதம் அதிகரித்துள்ளன. 169 சதவீதம் வழக்குகள் அதிகமாகி உள்ளன. வீட்டில் உள்ள பெண்களுக்கும் வீட்டு வன்முறை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மதுவும் போதையும்தான் இதற்கு காரணம். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக பொதுமக்கள் வெறுப்போடு காத்திருக்கின்றனா்.
கொங்கு மண்டலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோட்டை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் போராடி வருகின்றனா். குப்பை நகரமாக திருப்பூா் விளங்கி வருகிறது என்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரஜினிகாந்த் வாா்த்தை எப்போதும் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவா் குறித்து தவறாக மதிப்பிடுவதோ பேசுவதோ ஏற்புடையது அல்ல அதுவும் அரசியலில் கத்துக்குட்டியாக உள்ள நபா் பேசுவது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு மற்றும் அதிமுக எடப்பாடி கே.பழனிசாமி கொடுத்த திட்டங்கள் மீது எப்படி ஸ்டிக்கா் ஒட்டி வருகிறாா்களோ அதேபோல தமிழா் தொன்மை பாரம்பரியம் மீதும் திமுக ஸ்டிக்கா் ஒட்ட முயல்கிறது என்றாா்.
தொடர்புடையது

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்
அண்ணாமலை தோ்தலில் போட்டியிட வேண்டும் - வானதி சீனிவாசன்

கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டி?
மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் முதல்வரின் சூழ்ச்சி எடுபடாது: வானதி சீனிவாசன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


