அதிமுக எம்எல்ஏக்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சி.வி. சண்முகம் தரப்பினர் அதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவில் இபிஎஸ் அணி, சி.வி. சண்முகம் தரப்பு அணி என இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.
சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து தற்போதைய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேபோல, தவெகவுக்கு எதிராக வாக்களித்ததால் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவரிடம் சி.வி. சண்முகம் தரப்பு மனு அளித்துள்ளது.
இதையடுத்து சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேல்மணி, சி. விஜயபாஸ்கர் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
EPS action against MLAs: C.V. Shanmugam Consults with his supported MLAs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சரவையில் சி.வி. சண்முகம் தரப்புக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?

கொறடா விவகாரம்: பேரவைத் தலைவருடன் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மீண்டும் சந்திப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு








