தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்: பிரதமர் மோடி

தமிழகத்தில் திமுகவை காங்கிரஸ் முதுகில் குத்தியதாக பிரதமர் மோடி விமர்சனம்

News image

பெங்களூரு கூட்டத்தில் பிரதமர் மோடி - PTI

Updated On :10 மே 2026, 1:49 pm IST

தமிழகத்தில் திமுகவை காங்கிரஸ் முதுகில் குத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

பெங்களூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது, "எந்தவொரு காங்கிரஸ் அரசும் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை. அரசு அமைந்த சில மாதங்களிலேயே காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான அலை வீசத் தொடங்கும்.

ஏனெனில், அவர்களுக்கு துரோகம் செய்ய மட்டுமே தெரியும். அவர்கள் பொய்யர்கள். அவர்களின் வாக்குறுதிகளும் பொய்யானவை.

ராகுல் காந்தியுடன் விஜய்

ராகுல் காந்தியுடன் விஜய் - X | Rahul Gandhi

தற்போது தமிழ்நாட்டின் நிலையைப் பாருங்கள். 25 முதல் 30 ஆண்டுகளாக திமுகவுடன் காங்கிரஸ் நெருங்கிய உறவில் இருந்தது. பலமுறை, காங்கிரஸை நெருக்கடிகளிலிருந்து திமுக காப்பாற்றியிருக்கிறது. உண்மையில், 2014 முன்பு காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது, திமுகவால்தான் காங்கிரஸ் தப்பித்து வந்தது.

இருப்பினும், காங்கிரஸின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து உழைத்து வந்த அதே திமுக, தற்போது அரசியல் சூழல் மாற்றத்தால் துரோகத்துக்கு ஆளாகிவிட்டது.

அதிகார வெறிகொண்ட காங்கிரஸ், கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுகவின் முதுகில் குத்திவிட்டது. இப்போது, தன்னை அரசியல்ரீதியாகத் தக்கவைத்துக் கொள்ள, ஒட்டுண்ணி காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு கட்சி தேவைப்படுகிறது" என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைப் பெற்ற நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இரண்டாமிடத்துக்கு எதிர்க்கட்சி நிலையை அடைந்தது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கான 118 இடங்களை தவெக பெறாததால், தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ், கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் கைகோர்த்தது.

இந்த நிலையில், முதல்வராக விஜய் இன்று பதவியேற்ற விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

Summary

Backstabbing comes naturally to the Congress. See what happened in Tamil Nadu, says PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.