தமிழ்நாடு அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் இடம்பெற்றதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக ஆளுநர் மாளிகை இன்று (மே 21) காலை வெளியிட்டது.
இதில், சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சா்களாக இடம்பெற்றுள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பொது தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகும் பெருமையையும் விஸ்வநாதன் பெற்றிருக்கிறார்.
Summary
An official announcement has been issued regarding the inclusion of two Congress MLAs in the Tamil Nadu Cabinet after 59 years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









