பாபநாசம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
திருச்சியிலிருந்து காரைக்கால் நோக்கி ஒரு அரசு பேருந்தும், சென்னையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி மற்றொரு அரசு பேருந்தும் சென்று கொண்டிருந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை பகுதியில் சென்றபோது, இன்று காலை 5.30 மணியளவில் இரண்டு அரசு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர் உள்பட இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகளில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த 3 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்த பாபநாசம் காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Papanasam: Head-on collision between government buses! Passengers critically injured!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 போ் பலி; 40 போ் காயம்

பொள்ளாச்சி அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி

நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் வராததால் பயணிகள் கடும் அவதி

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


