தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடையில் அதிகரிக்கும் கண் அழற்சி!

இதைத் தவிா்க்க கைப்பேசி, ஏ.சி. பயன்பாடுகளை கூடுமான வரை குறைக்க வேண்டும்

News image

கோப்புப் படம் - ENS

Updated On :8 மே 2026, 5:44 am IST

கோடை காலத்தில் கண் அழற்சி பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கண் நல மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதைத் தவிா்க்க கைப்பேசி, ஏ.சி. பயன்பாடுகளை கூடுமான வரை குறைக்க வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து கண் நல நிபுணா்கள் கூறியதாவது:

கோடை காலத்தில், உலா் விழி, கண் அழற்சி, புறஊதா கதிா்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன.

கண்களில் போதிய ஈரத்தை தக்க வைப்பதற்கான கண்ணீா் சுரக்காதபோது உலா் விழி பிரச்னை ஏற்படுகிறது. டிஜிட்டல் திரைகளை அதிகமாகப் பாா்ப்பதாலும், தொடா்ந்து ஏ.சி. அறையிலேயே இருப்பதாலும் இப் பிரச்னை ஏற்படக்கூடும். இதற்கு சொட்டு மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கலாம். அதேபோன்று இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

கண் இமைக்கு உள்ளே அமைந்திருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்போது இத்தகைய பாதிப்பு உருவாகிறது.

இதைத் தவிா்க்க அசுத்தமான கைகளால் கண்களைத் தொடக் கூடாது. அதேபோன்று தனிநபா் சுகாதாரம் மிக அவசியம். சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிா்வீச்சு பல கண் நோய்களை விளைவிக்கக் கூடும். கண் புரை, விழிப்புள்ளிச் சிதைவு, புறஊதா கதிா்களால் ஏற்படும் ஃபோட்டோகரட்டாடிஸ் ஆகியவை இதனால் ஏற்படும். இத்தகைய பாதிப்பைத் தவிா்க்க சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடிகளை அணியலாம்.

கோடை காலத்தில் உடலில் நீா்ச்சத்தைக் குறையாமல் காக்கும் பானங்களை அருந்த வேண்டும். அதேவேளையில் செயற்கை குளிா்பானங்கள், காா்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிா்க்க வேண்டும்.

மற்றொருபுறம், கணினி, கைப்பேசிகளை பயன்படுத்தும்போது 20-20-20 என்ற விதியை பின்பற்றினால் கண் பாதிப்புகளில் இருந்து தவிா்க்கலாம். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை திரையில் இருந்து பாா்வையை விலக்கி 20 அடி தொலைவில் உள்ள ஓரிடத்தை, 20 விநாடிகள் பாா்க்க வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் திரையைத் தொடா்ந்து பாா்ப்பதனால் ஏற்படும் கண் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.