அதிமுக தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 24) வெளியிட்டார். இதில் 297 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கெனவே 3 கட்டங்களாக 16 வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், முழுத் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.
இதில், கொத்தடிமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
மதம் மாறினாலும் பட்டியலின மக்களுக்கான சலுகைகள் தொடரும்.
இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு தனி பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்கள் வீடு கட்டிக்கொள்ள குடியிருப்பு மனைகள் தரப்படும்.
அனைத்து மாநகராட்சிகளிலும் சுற்றுச் சாலைகள் அமைக்கப்படும்.
அனைத்து முக்கிய நகரங்கள், சுற்றுலா மையங்களில் இலவச வைஃபை வசதி.
கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.
நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் நெசவுக் கூடத்தோடு சேர்ந்த பசுமை வீடுகள்.
அறநிலையத் துறை கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு.
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வலியுறுத்தப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தப்படும்.
100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது வீரர்கள் இறந்தால், அவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
பூசாரிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும்.
தெரு நாய்கள், மாடுகளுக்கு விலங்குகள் நலக் காப்பகம் அமைக்கப்படும்.
தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை.
நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் பள்ளி சீருடைகள், விலையில்லா வேட்டி, சேலை தயாரிக்கப்படும்.
10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்.
Summary
TN election 2026 Waiver of educational loans; permanent employment for nurses AIADMK promise
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையம், கட்சிகள் பதிலளிக்க உத்தரவு!

ஆட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

717 டாஸ்மாக் கடைகளை மூட முடிவு; நான்காயிரம் ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



