ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இயக்குநர் பாக்யராஜ் மறைவு: நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து

இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவையொட்டி, நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவது குறித்து...

Cinema shooting

படப்பிடிப்புகள் ரத்து - பிரதிப் படம்

Published On :27 ஜூன் 2026, 2:36 pm IST

இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவையொட்டி, நாளை (ஜூன் 28) ஒருநாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இன்று (ஜூன் 27) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத் துறையினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் பாக்யராஜின் மறைவையொட்டி, நாளை (ஜூன் 28) காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Summary

All film shoots cancelled tomorrow following the passing of Director K. Bhagyaraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.