ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி

இயக்குநர் பாக்யராஜ் குறித்து நடிகை ஊர்வசி கூறியிருப்பதாவது...

Bhagyaraj, Urvashi.

இயக்குநர் கே. பாக்யராஜ், ஊர்வசி. - கோப்புப் படங்கள்.

Published On :27 ஜூன் 2026, 4:23 pm IST

இயக்குநர் கே. பாக்யராஜ் குறித்து நடிகை ஊர்வசி ஊடகம் இன்றுக்கு பேட்டியளிக்கும்போது, “இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை” எனக் கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராகவும்ம், நடிகரகவும் இருந்த பாக்யராஜ் (73 வயது) இன்று காலை அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.

பாக்யராஜுக்கு மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா உள்ளனர். நலமுடன் இருந்த பாக்யராஜ் திடீரென மரணமடைந்திருப்பது திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பாக்யராஜ் படத்தில் முந்தானை முடிச்சு என்ற படத்தில் அறிமுகமான நடிகை ஊர்வசி இவரது இறப்பு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது:

விக்ரம் படத்தின் படப்பிடிப்பாக தயாராகிக் கொண்டிருந்தேன். பாக்யராஜ் இறப்பு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவரது நினைவலைகளைப் பகிரும் நிலையில் நான் இப்போது இல்லை. அவரது இழப்பும் அவரது குருநாதர் பாரதிராஜ அனைவருக்குமே எவ்வளவு பெரியதெனத் தெரியும்.

தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே அவரைப் போல கதை, திரைக்கதை, வசனம் எழுதுவர்கள் இல்லை. அவரைக் கேட்காமலேயே பலரும் அவரது திரைக்கதைகளை எடுத்துள்ளார்கள். தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் எடுத்துள்ளார்கள். ஏனெனில், அவரைப் போல வித்தியாசமாக எழுத முடியாது என்பதாலேயே அவர்கள் எடுத்தார்கள். நானே அப்படி பல படங்களில் அவரது திரைக்கதையில் நடித்துள்ளேன் என்றார்.

Summary

There is no one else like Bhagyaraj in Indian cinema: Urvashi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.