/

கண்தானத்துக்கு பதிவு செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் காண்பார்!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ், கண்தானம் செய்ய பதிவு செய்திருந்தார் என்பது பற்றி..

News image
Updated On :27 ஜூன் 2026, 12:31 pm IST

இயக்குநர் கே. பாக்யராஜ், தன்னுடைய கண்களை தானம் செய்ய பதிவு செய்திருந்ததால், அவரது கண்களை தானம் பெறுவதற்காக மருத்துவர்கள் குழு இல்லத்துக்கு வருகை தந்துள்ளது.

இயக்குநர், திரைக்கதை மன்னன் பாக்யராஜ், மாரடைப்பால் இன்று காலை திடீரென காலமானார். அவருடைய நுங்கம்பாக்கம் இல்லத்தில் அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய கண்களை தானம் செய்ய பதிவு செய்து வைத்திருந்ததால், கண் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கே. பாக்யராஜ் மறைவுகுறித்து தகவல் அளித்தனர்.

உடனடியாக கண் மருத்துவமனை மருத்துவர்கள் குழு பாக்யராஜ் வீட்டுக்கு விரைந்துள்ளனர். பாக்யராஜின் கருவிழிகளை பெற்று, கண் பார்வையற்றவர்களுக்கு பொருத்துவார்கள். அதன் மூலம் மறைந்தாலும் பாக்யராஜ் இந்த உலகை தன்னுடைய கண்களால் காண்பார் என்பது அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது.

Summary

Bhagyaraj, who pledged his eyes for donation! Even after passing away, he continues to see the world!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.