ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர்

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படுவது குறித்து...

Bhagyaraj

பாக்யராஜ் - கோப்புப் படம்

Published On :27 ஜூன் 2026, 11:47 am IST

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இன்று (ஜூன் 27) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உறவினர்கள், திரையுலகினர், மக்கள் அஞ்சலி செலுத்த உடல் வைக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜூன் 28) பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திரைத்துறைக்கு பாக்யராஜ் அளித்த பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிப் பயணத்துக்கும், அவரது உடலுக்கும் அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Summary

State honours for the mortal remains of the late Director Bhagyaraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.