ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவாவில் குஷ்பு மகள் திருமணத்தில் பங்கேற்ற கே. பாக்யராஜ்!

கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் பங்கேற்றிருந்தாராம் கே. பாக்யராஜ்.

Bhakyaraj

பாக்யராஜ் - File photo

Published On :27 ஜூன் 2026, 2:25 pm IST

கோவாவில் ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் பங்கேற்றிருந்ததாக திரைப் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சி மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் ஜூன் 25ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றிருந்த நிலையில், பாக்யராஜும் இந்த திருமணத்துக்குச் சென்று கலந்துகொண்டுள்ளார்.

திருமண விழாவில் பங்கேற்ற அனைவருமே பட்டு வேட்டி, பட்டு சட்டையில் பங்கேற்றதைப் போலவே கே. பாக்யராஜும் ஜம்மென்று அழகான பட்டு வேட்டி - சட்டை அணிந்து பங்கேற்று, மேடையேறி மணமக்களை வாழ்த்திய விடியோக்களும் இப்போது வெளியாகியிருக்கிறது.

திருமணம் நடைபெற்ற அன்றைய இரவே அவர் கோவாவிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்பிய நிலையில், இன்று காலை நடைப்பயற்சி சென்றிருந்த போது லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக குடும்பத்துக்கு தகவல் சொல்ல, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரு நாளைக்கு முன்பு கோவாவில் நடந்த திருமணத்தில் தங்களுடன் மிக மகிழ்ச்சியாக கலந்து கொண்ட ஒருவர் இன்று இல்லையே என்று நேற்று கோவாவில் இருந்து சென்னை திரும்பிய திரைப் பிரபலங்கள் கலங்கி நிற்கிறார்கள்.

மறைவுச் செய்தி அறிந்து கே. பாக்யராஜ் இல்லத்துக்கு வந்த நடிகை சுஹாசினி செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுடன் அவரும் கோவாவில் நடைபெற்ற குஷ்பு மகள் திருமணத்துக்கு வந்திருந்தார். சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருந்தார். ரொம்ப சந்தோஷமாகவே காணப்பட்டார். சிரித்துக் கொண்டே இருந்தவர், சிரித்துக் கொண்டே மறைந்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

K. Bhagyaraj reportedly attended the wedding of actress Khushbu's daughter, which took place in Goa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.