இயக்குநர் பாரதிராஜா மறைவையொட்டி, இன்றைய படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.
இயக்குநர் இமயம் என திரையுலகினரால் அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா புதன்கிழமை (ஜூன் 10) அதிகாலை உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டு, திரையுலகினரும் அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, அவரது சொந்த ஊரான தேனிக்கு இன்று (ஜூன் 12) காலை அவரின் உடல் கொண்டுசெல்லப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதனிடையே, இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கையொட்டி, இன்று காலை முதல் மாலை வரையில் படப்பிடிப்புகள் அனைத்தையும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ரத்து செய்தது.
Summary
Tamil Film Producers Council announced that today's film shoots have been cancelled following the passing of director Bharathiraja
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா மறைவு: இறுதி ஊர்வலம் தொடங்கியது!

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. இரங்கல்!

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
கிராமிய வாழ்வு, மனித உணர்வுகளை வெளிப்படுத்திய படைப்புகள்! பாரதிராஜாவுக்கு ஆளுநர் இரங்கல்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




