தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டில் இயங்குவதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்து வரும் நேரத்தில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு, ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நன்றி தெரிவித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுவரை, தனியார் பள்ளிகளுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்துதான் அனுமதி பெறும் நிலை இருந்தது, தற்போது அந்த நிலை மாறியிருப்பதாக அவர் பதிவிட்டிருக்கிறார்.
அவருடைய பதிவில், கிராமப்புறக் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசக் கல்வியை வழங்கும் எங்கள் 'கலைவாணி கல்வி மையம்' என்ற கிராமப்புறப் பள்ளிக்கு, முந்தைய அரசிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்பட்டன.
அந்தப் பள்ளி முற்றிலும் இலவசமாகச் செயல்படும் பள்ளியாக இருந்தபோதிலும், அதற்கான அனுமதியைப் பெற பெருமளவிலான பணம் கேட்கப்பட்டது. பணம் கொடுத்துத்தான் பள்ளிக்கு அனுமதி பெற வேண்டும், அது ஒன்றுதான் வழி என்றும் எங்களிடம் முந்தைய அரசால் கூறப்பட்டது.
ஆனால், தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, அனுமதிகள் விரைவாகவும் தானாகவும் கிடைக்கப்பெற்றுள்ளன.
எங்கள் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சாதகமான மாற்றத்தைப் பாராட்டுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஊக்கமளிக்கும் மாற்றத்திற்காகத் முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Summary
Zoho founder Sridhar Vembu thanked Chief Minister Vijay for the approval granted to the school.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் ஏஐ எதிர்காலத்தை அடித்தளத்திலிருந்து உருவாக்க வேண்டும்: ஸ்ரீதர் வேம்பு

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்: ஸ்ரீதர் வேம்பு

குடியரசுத் தலைவர் ஆட்சியுடன் மீண்டும் தேர்தல்! ஸ்ரீதர் வேம்பு பதிவு

தாயகம் திரும்புங்கள்! அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு கடிதம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




