சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் செய்த சைகை, மரபை மீறிய செயல் அல்ல என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பதிலளித்துள்ளார்.
முதல்வர் விஜய் நேற்று(ஜூன் 23) சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை அளிக்கையில் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவை வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின்னர் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், தனது உரையை முடிக்கும்போது, முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் பிரபலமான சைகையைச் செய்தார். உடனே, அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். அதிலும் பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்று, அவரும் சரி சென்று சொல்ல, முதல்வர் அந்த சைகையை செய்து காட்டினார்.
இந்நிலையில் அவை மரபை முதல்வர் மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவுக்கு வந்த பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், "நடந்தது எதுவும் அவை மீறியது அல்ல" என்று கூறினார்.
தேர்தலுக்கு முன்பாக திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவுற்றபோது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் செய்த செய்கை, இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
CM Vijay action: Did not violate House decorum: TN Speaker
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? 4 பேருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ்!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! 21 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்
அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் தகவல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




