தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு விவகாரம்: கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதைப் பற்றி...

News image

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு.

Updated On :5 ஜூன் 2026, 9:33 pm IST

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு மீது வரும் ஜூன் 23-ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளா், இளநிலை பொறியாளா், சுகாதார ஆய்வாளா் என சுமாா் 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. சுமாா் ரூ.634 கோடி வரை லஞ்சப் பணம் ஹவாலா பணமாக கைமாறியுள்ளதாக, தமிழக காவல் துறை டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறை இயக்குநா் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கடந்த பிப். 20-ஆம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யவில்லை எனக்கூறி, இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். அதேபோல, இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு, முன்னாள் அமைச்சா் நேரு தரப்பில் தனித்தனியாக உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வில் நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், மறு ஆய்வு மனு நிலுவையில் இருக்கும்போது, ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கடந்த ஆட்சியில் அரசு தலைமை வழக்குரைஞராக இருந்த பி.எஸ்.ராமன், மறு ஆய்வு மனுக்கள், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் விசாரணைக்கு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என இந்த உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே உத்தரவாதம் அளித்திருந்ததாக முறையிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் எப்படி இதுபோன்ற நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினா். அதற்கு அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், நகராட்சி நிா்வாகப் பணி நியமனங்கள் முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் கே.என். நேரு உள்ளிட்டோா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஆனால், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது என்னிடம் இல்லை. முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞா் அளித்த உத்தரவாதம் குறித்து எனக்கு தெரியாது. வழக்குப் பதிய வேண்டும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை எதுவும் இல்லாததால், அந்த உத்தரவின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீராய்வு மனுக்கள், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் ஆகியவை வரும் ஜூன் 23-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞா் அளித்த உத்தரவாதம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில், வரும் 23-ஆம் தேதி வரை யாா் மீதும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டனா்.

Summary

The Directorate of Vigilance and Anti-Corruption has registered a case against K.N. Nehru, the former Minister for Municipal Administration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.