ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்றைய செய்திகள் ஜூலை 13 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

smart card joseph vijay

பயனாளிகளுக்கு ஸ்மார்ட் அட்டையை வழங்கிய முதல்வர் சி. ஜோசப் விஜய் - - DIPR

Published On :13 ஜூலை 2026, 8:41 pm IST
3:11 pm, 13 ஜூலை 2026

குஜராத் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பையே எட்டாத பாதிக்குப் பாதி மாணவர்கள்!

குஜராத் மாநிலத்தில் படிக்கும் பாதிக்குப் பாதி மாணவர்கள் 12 ஆம் வகுப்பையே முடிப்பதில்லை என்று கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை (UDISE) அறிக்கை வெளியிட்டுள்ளது.

1:48 pm, 13 ஜூலை 2026

புதிய ரேஷன் அட்டைகளை வழங்கினார் முதல்வர் விஜய்!

பெரம்பூரில் உள்ள நியாய விலைக் கடையில் புதிய ஸ்மார்ட் அட்டைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 13) தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய், பயனாளர்காளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.

1:47 pm, 13 ஜூலை 2026

வியாசர்பாடி பணிமனையில் முதல்வர் விஜய் ஆய்வு!

பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பணிமனையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 13) ஆய்வு மேற்கொண்டார்.

பணிமனையில் உள்ள மின்சாரப் பேருந்துகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

1:47 pm, 13 ஜூலை 2026

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிட மாற்றம்!

ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி சி. மகேஸ்வரிக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

1:46 pm, 13 ஜூலை 2026

ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞான பீட விருது இன்று (ஜூலை 13) வழங்கப்பட்டது.

இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞான பீட விருதை முன்னாள் அமைச்சர் கரன் சிங், வைரமுத்துவுக்கு வழங்கி கெளரவித்தார்.

12:13 pm, 13 ஜூலை 2026

ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட் தாக்கல் எப்போது?

10:50 am, 13 ஜூலை 2026

வாட்ஸ்ஆப் - மத்திய அரசுக்கு இடையே ஐந்து ஆண்டு காலமாக நீடிக்கும் மோதல்!

வாட்ஸ்ஆப் விரைவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்த பயனர் பெயர் விவகாரத்தில், வாட்ஸ்ஆப் - மத்திய அரசுக்கு இடையே சண்டை வலுத்திருந்தாலும், இது இப்போது உருவானதுல், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதாகவே தரவுகள் தெரிவிக்கின்றன.

9:48 am, 13 ஜூலை 2026

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9:25 am, 13 ஜூலை 2026

திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்கு

நில அபகரிப்பு புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

7:39 am, 13 ஜூலை 2026

ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7:35 am, 13 ஜூலை 2026

இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்!

வியத்நாம் படகு விபத்தில் பலியான 15 இந்தியர்களின் உடல்கள் இன்று தாயகம் கொண்டு வரப்படுகின்றன.

6:15 am, 13 ஜூலை 2026

மு.க. ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் பூமணியின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6:08 am, 13 ஜூலை 2026

எ.வ. வேலு வழக்கு

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

5:27 am, 13 ஜூலை 2026

தீ விபத்து

பாங்காக்கில் உள்ள மதுக்கூடத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5:27 am, 13 ஜூலை 2026

பறவை மோதியது

லண்டனிலிருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் மீது இன்று அதிகாலை பறவை மோதியது.

5:26 am, 13 ஜூலை 2026

7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெறும் வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்காக 7,754 பக்தர்களைக் கொண்ட 12வது குழு பகவதி நகர் முகாமிலிருந்து புறப்பட்டுள்ளது.

5:26 am, 13 ஜூலை 2026

தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது.

5:26 am, 13 ஜூலை 2026

2015-ஆம் ஆண்டுக்குப் பின்.. மிக வெப்பமான ஜூலை மாதம்!

தமிழ்நாட்டில், வழக்கமான ஜூன் மாதம் பருவமழை தொடங்கியதும், வெய்யில் தன்னுடைய வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள ஆரம்பிக்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களும் வெய்யில் காலமாகவே மாறிவிட்டது.

5:07 am, 13 ஜூலை 2026

தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 13)

வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

5:06 am, 13 ஜூலை 2026

எழுத்தாளர் பூமணி காலமானார்

சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும் 'அசுரன்' திரைப்பட கதாசிரியருமான மூத்த எழுத்தாளர் பூமணி காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.