ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வியாசர்பாடி பணிமனையில் முதல்வர் விஜய் ஆய்வு!

வியாசர்பாடி பணிமனையில் மின்சாரப் பேருந்துகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டது குறித்து...

Chief Minister C joseph Vijay inspects the Vyasarpadi workshop

பணிமனை ஊழியர்களுடன் முதல்வர் சி. ஜோசப் விஜய் - DIPR

Published On :13 ஜூலை 2026, 5:54 pm IST

பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பணிமனையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 13) ஆய்வு மேற்கொண்டார்.

பணிமனையில் உள்ள மின்சாரப் பேருந்துகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்குச் சென்ற முதல்வர் சி. ஜோசப் விஜய், எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

பிறகு, சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள நியாய விலைக் கடையினைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மின்சாரப் பேருந்துகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். மின்சாரப் பேருந்து ஒன்றில் அமர்ந்து அதன் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

வியாசர்பாடி பணிமனையில் 32 சார்ஜிங் மையங்கள் உள்ளன. இதன் மூலம் மின்சார பேருந்துகளை 2 மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட பேருந்து 200 கி.மீ. வரை செல்லும். இதுவே ஏ.சி. பேருந்தாக இருந்தால் 180 கி.மீ. வரை செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chief Minister C joseph Vijay inspects the Vyasarpadi workshop

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.